யாழ் இளைஞர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளேன்! மனோ கணேசன்..
ஆவாகுழுவுடன்
தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின்பெயரில் கைது செய்யப்பட்ட யாழ்
இளைஞர்கள் 11 பேரின் வழக்குகளும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழிருந்து
அகற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறுகையில்,
ஆவா குழு உறுப்பினர்கள் என சமீபத்தில் கைது செய்யப்பட்டு, கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சார்ந்த இளைஞர்களின் விவகாரம், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழிருந்து அகற்றப்பட்டு, சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்மூலம் இவர்களுக்கு ( Date-30) பிணை வழங்கப்பட்டு, கைப்பற்றப்பட்ட வாகனங்களும் மீளளிக்கப்பட்டு, இது தொடர்பில் கடந்த வாரம் என்னை சந்தித்து உருக்கமாக வேண்டுகோள் விடுத்த சம்பந்தப்பட்ட இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நான் கொடுத்திருந்த உறுதிமொழி நிறைவேறியுள்ளது.
சம்பந்தப்பட்ட இளைஞர்கள் தொடர்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழேயே வைக்கப்பட்டிருப்பார்களாயின் இவர்களது எதிர்காலம் பாழாகியிருக்கும்.
இவர்களின் இளம் வயது விபரங்களை அறிந்த பிறகே நான் இந்த விவகாரத்தில் தலையிட்டேன். அத்துடன் மீண்டும் பயங்கரவாத சட்டம் பயன்படுத்தப்பட்டு எவரும் இந்த நாட்டில் கைது செய்யப்பட கூடாது என்பது எனது கொள்கை நிலைப்பாடாகும்.
இதன் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்று கொள்கை நிலைப்பாட்டு முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன்.
ஆனால், இந்த வழக்குகள் இன்னும் முடியவில்லை என்பதை சந்தேக நபர்களும், யாழ். மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர்கள் விசாரிக்கப்படுவார்கள். குற்றங்கள் நிரூபிக்கப்படுமானால், இவர்களுக்கு குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும்.
அதில் எந்தவித மாற்றமும் இல்லை. விரைவில் இந்த வழக்குகளை யாழ்ப்பாண நீதிமன்றங்களுக்கு மாற்றி தருகிறேன் என உறுதியாகி கூறுவதோடு, இந்த வழக்குகள் யாழ் நீதிமன்றங்களுக்கு வரும்போது, உரிய தீர்ப்புகள் வழங்கப்பட்டு இவர்கள் சமூகத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என கூறினார்.
மேலும், யாழ் மக்களுக்கு தொல்லை தரும் வண்ணம், மீண்டும் வடக்கில் ஆவா குழு நடவடிக்கைகள் தலை தூக்குமானால், எந்தவித தயக்கமும் இல்லாமல் மிக கடுமையான பொலிஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதையும் இங்கே கூறி வைக்க விரும்புகிறேன் என சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Unknown
on
5:55:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:55:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: