Top Ad unit 728 × 90

மாவீரர் தினத்தை தடுப்பதற்கு இராணுவத்தினருக்கு எந்த அதிகாரமும் கிடையாது!பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

மாவீரர் தினத்தை தடுக்கும் அதிகாரம் இராணுவத்தினருக்கு இல்லை என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

மாவீரர் தினத்தை தடுக்க வேண்டுமா அல்லது நடத்த அனுமதிக்க வேண்டுமா என்பதை பொலிஸ் மற்றும் சிவில் நிர்வாகமே தீர்மானிக்க வேண்டும்.

வடக்கில் இராணுவ பாதுகாப்பை அதிகரிக்கக்கோரி எந்த கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர்,

வடக்கு மாகாணத்தில் சிவில் மற்றும் பொலிஸ் நிர்வாக நகர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றமையால் இராணுவ பாதுகாப்புகளை பலப்படுத்த எந்தத் தேவையும் ஏற்படவில்லை என்றார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இம்முறை கார்த்திகை 27ம் திகதி மாவீரர் நாள் மிக எழுச்சியோடு தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.

உணர்பூர்வமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி திரண்டு, போர்க்களத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இது தென்னிலங்கையில் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மாவீரர் தினத்தை தடுப்பதற்கு இராணுவத்தினருக்கு எந்த அதிகாரமும் கிடையாது!பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு! Reviewed by Unknown on 8:22:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.