Top Ad unit 728 × 90

கள்ளக் காதலனுடன் சேர்ந்து தன் குழந்தையை அடித்தே கொன்ற தாய்! ஏன்,ஏதற்கு?

பிரான்சில் பெண் ஒருவர் கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்தே கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Reims நகரத்திலே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில், டோனி என்ற 3 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த டோனியின் 19 வயதான தாய் கரோலின், 24 வயதான Loïc என்ற ஆணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

கரோலினின் வீட்டிற்கு வரும் Loïc தினமும் குழந்தையை அடித்து சித்திரவதை செய்துள்ளான். இதை கரோலின் கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று Loïc அடி தாங்காமல் டோனி மயங்கி விழுந்துள்ளார். குழந்தை மயங்கி சில மணிநேரம் கழித்தே கரோலின் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடலின் பல பகுதிகள் பயங்கர காயம் இருந்ததால் சந்தேகமடைந்த பொலிசார் கரோலினிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதையடுத்து கரோலின் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதில் முக்கிய குற்றவாளியான Loïcவிற்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கரோலினுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குழந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் Reims நகர மக்கள், டோனி வாழ்ந்த குடியிருப்பை நோக்கி பேரணியாக சென்றுள்ளனர்.
கள்ளக் காதலனுடன் சேர்ந்து தன் குழந்தையை அடித்தே கொன்ற தாய்! ஏன்,ஏதற்கு? Reviewed by Unknown on 3:53:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.