Top Ad unit 728 × 90

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக வருகிறார் யார் தெரியுமா?

இலங்கை கிரிக்கெட் அணிக்கு வேக பந்து வீச்சு பயிற்சி கொடுக்க பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் இலங்கைக்கு இந்த மாத இறுதியில் செல்ல உள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பலத்தை மேலும் வலுப்படுத்த, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இரண்டு முறை உலக கிண்ண போட்டிகளில் தலைவராக இருந்த வாசிம் அக்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Sultan of Swing என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் வாசிம் அக்ரம் 1992 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டி இறுதி ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது பெற்றவர்.

இவர் விளையாடும் காலத்தில் இவர் பந்துவீச்சு எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது அனைவரும் அறிந்ததே!.

தற்போது ஐம்பது வயதாகும் வாசிம் அக்ரம் இந்த மாதம் இறுதியில் இலங்கைக்கு செல்வதை முன்னிட்டு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக வருகிறார் யார் தெரியுமா? Reviewed by Unknown on 3:53:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.