பறிபோனது சாம்பியன் பட்டம்:கோவபத்தில் நடுவரை தூக்கி எறிந்த பாடிபில்டர்!(படங்கள்)
கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் நடைபெற்ற பாடிபில்டர் போட்டியின் போது
பட்டத்தை இழந்த போட்டியாளர் ஒருவர் கோபத்தில் நடுவரை தூக்கி வீசிய சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏதன்ஸ் நகரில் இந்த ஆண்டுக்கான வைர கிண்ணம் கட்டழகன் போட்டி நடைபெற்றது. குறித்த போட்டியில் தான் நடுவரின் தீர்ப்புக்கு எதிராக போட்டியாளர் ஒருவர் கடுமையாக நடந்துகொண்டது.
கிரேக்கத்தின் பிரபல பாடிபில்டர்களில் ஒருவர் கியான்னிஸ் மேகோஸ். இவர் குறித்த போட்டியில் 100 கிலோவுக்கான போட்டியாளர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் அவர் இருந்துள்ளார்.
ஆனால் நடுவர்களின் கணிப்பு வேறுமாதிரி அமைந்துள்ளது. இந்த ஆண்டின் சாம்பியனாக அவர்கள் வேறொரு நபரை தெரிவு செய்து அறிவித்துள்ளனர்.
இதில் ஆத்திரம் கொண்ட கியான்னிஸ் நடுவர்களை தாக்கத் துவங்கியுள்ளார். கிரேக்கத்தில் மிகவும் பிரபலமானவரும் பாடிபில்டர்களால் மரியாதை அளித்து வருபவருமான அர்மாண்டோ மார்க்வெஸ் என்ற நடுவரை கியான்னிஸ் தூக்கிய வீசிய சம்பவம் அங்கிருந்த பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதனிடையே அங்கிருந்த பார்வையாளர்கள் கியான்னிசை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களது முயற்சி கியான்னிசிடம் பலிக்கவில்லை.
பாடிபில்டர்களுக்கான பிரத்யேகமாக இயங்கும் இணைய தளம் ஒன்று கியான்னிசிடம் இருந்து பெருந்தொகையை பிழையாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதுபோன்ற செயல்களை எந்த விளையாட்டிலும் வீரர்கள் எவரும் செய்வதை நிர்வாகம் அனுமதிக்க கூடாது எனவும் அந்த இணைய தளம் கடுமையாக விமர்சித்துள்ளது.

Reviewed by Unknown
on
4:00:00 PM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0OeL8Npr7XxM6EBS822KREv5Fv7r_8TFRnJ6gsRJMgDVaV_kH90iXzeB6mh4YNkd13y0ZJvX7R4Ts5XWlj2AG8veOnrX4nSmmoyC_2JcYSJpo16N8Ji4zAXEAJgyJl-iEwkh5nmv4TWla/s72-c/ice_screenshot_20161201-052602.png)
கருத்துகள் இல்லை: