Top Ad unit 728 × 90

இறப்பதற்கு சில நிமிடம் இருந்தபோது காதல் மனைவிக்கு போன் செய்த வீரர்:மனதை உருக்கியுள் சம்பவம்!

பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு சென்று கொண்டிருந்த விமான விபத்தில் மரணமடைந்த பிரேசில் அணி கால்பந்து வீரர் இறப்பதற்கு முன்னர் தன் மனைவியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ள விடயம் தற்போது தெரியவந்துள்ளது.

பிரேசில் நாட்டிலிருந்து அந்நாட்டு கால்பந்து வீரர்கள் உள்ளிட்ட 81 பேருடன் சென்று கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதில் 76 பேர் பலியாகினர்.

இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்கள். இதில் பிரேசில் நாட்டின் உள்ளூர் கால்பந்து அணியான Chapecoense காக விளையாடி வரும் Danilo Padhila (31) -ம் அடங்குவார்.

படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த தருணத்தில் தன் காதல் மனைவியுடன் தொலைபேசியில் பேசியுள்ள விடயம் தற்போது தெரியவந்துள்ளது.

அந்த காயத்திலும் தன் மனைவி Leticiaவுக்கு போன் செய்து தைரியமாக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஆனால் தொலைபேசியில் மனைவியுடன் பேசி முடித்த சில நிமிடங்களில் அவர் உயிர் பிரிந்துள்ளது.

சமூக வலைதளங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்த Danilo சில தினங்களுக்கு முன்னர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறப்பதற்கு சில நிமிடம் இருந்தபோது காதல் மனைவிக்கு போன் செய்த வீரர்:மனதை உருக்கியுள் சம்பவம்! Reviewed by Unknown on 4:34:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.