மாவீரர் தினத்தை குழப்பும் நோக்கில் இராணுவத்தினரின் ஏற்பாடு செய்த கழியாட்ட நிகழ்ச்சி எடுபடவில்லை!
மாவீரர்களின் நினைவு தினத்தை குழப்பும் வகையில் வவுனியாவில் இராணுவத்தினரால் களியாட்ட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் அந்த நிகழ்ச்சி திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நாளைய தினம் மாவீரர்களுக்கான நினைவேந்தல்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், மாவீரர் நினைவேந்தலுக்கு அரசாங்க தரப்பிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில், மாவீரர் தினத்தை குழப்பும் வகையில் வவுனியாவில் இராணுவத்தினரால் இசை நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.
வவுனியாவில் அமைந்துள்ள வன்னி படை தலமையகத்தின் ஏற்பாட்டில் வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்காவில் இன்று குறித்த இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இராணுவத்தினரின் குறித்த செயற்பாட்டிற்கு தமிழ் மக்கள் பலரும் அதிருப்தி வெளியிட்டு வந்த அதேவேளை, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்திருந்தார்.
குறித்த இராணுவ செயற்பாடு தொடர்பில் ஊடகங்களும் வெளிப்படுத்தியிருந்தன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்துவந்த இராணுவம், நேற்று பிற்பகல் நிகழ்வை ரத்து செய்வதாகத் தெரிவித்து நிகழ்வுக்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளை அகற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Unknown
on
3:48:00 AM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiONuEJGCMYPBDJE4kXP8SOkq4ZCXft1ubtvNDrYbXnrGT4nKVrsydq32uFt3fyc9Nlr3U1H2DMbPWLQX2qHyPp5MIidgFVwsnH8iewwxODQnGH4BvcoAO55rwikIsK83jTc1bMlG6Qrr2T/s72-c/we11.png)
கருத்துகள் இல்லை: