Top Ad unit 728 × 90

ஜெயலலிதாவின் ஆன்மா எனக்கு உத்தரவிட்டது: கண்ணீர் மல்க பேசிய சசிகலா

அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

பொதுச் செயலாளராக பதவியேற்க சசிகலா போயஸ் கார்டனில் இருந்து நண்பகல் 12.04 மணிக்கு கட்சியின் தலைமை அலுவலகத்துக்குப் புறப்பட்டார்.

அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களது வரவேற்பை பெற்றுக் கொண்ட சசிகலா, அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் அறையில் ஜெயலலிதா நாற்காலியில் சசிகலா அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கண்ணீர் மல்க பேசிய சசிகலா

அம்மாவுக்கு இயக்கம் தான் வாழ்க்கை...ஆனால் எனக்கு அம்மாதான் வாழ்க்கை.

1 1/2 கோடி மழலைகளை உன்னிடம் ஒப்படைப்பதாக ஜெயலலிதாவின் ஆன்மா என்னிடம் உத்தரவிட்டதாக உணர்கிறேன்.

சூழ்ச்சிகளை முறியடித்து நாளை நமதே என செயல்பட வேண்டும்.

எம்ஜிஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நாடு போற்றும் வகையில் கொண்டாடப்படும்.

வாழும் வரை அதிமுகவின் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம்.

ஜெயலலிதா காட்டிய வழியில் இராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்படுவோம். இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும்.

விமர்சிப்பவர்களும் பின்தொடரும் புனிதமான பொது வாழ்வை மேற்கொள்வோம்.

ஜெயலலிதாவை மீட்டெடுக்க 75 நாட்கள் போராடினோம். ஆனால் அவரின் இறப்பு கற்பனையில் நினைத்து பார்க்க முடியாத ஒன்று.
ஜெயலலிதாவின் ஆன்மா எனக்கு உத்தரவிட்டது: கண்ணீர் மல்க பேசிய சசிகலா Reviewed by Unknown on 6:20:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.