புத்தாண்டு கொண்டாட்டம்: மகன் உள்ளிட்ட 12 பேரை சுட்டுத்தள்ளிய தந்தை
பிரேசில் நாட்டின் காம்பினாஸ் நகரில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் குடியிருந்து வரும் 41 வயதான இசமார பில்லர் என்பவர் தமது கணவர் சிட்னே ராமிஸ்(46) என்பவரை பிரிந்து தமது மகனுடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் மகனை தமக்கு விட்டுத்தருமாறு சிட்னே பலமுறை தமது முன்னாள் மனைவியிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளார். ஆனால் எக்காரணம் கொண்டும் மகனை விட்டுத்தர முடியாது என இசமாரா உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதனிடையே இன்று இசமாரவின் இல்லத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது துப்பாக்கியுடன் நுழைந்த சிட்னே அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் இசமரா மற்றும் அவர் மகன் உள்ளிட்ட 12 பேர் சம்பவயிடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடி திடிக்க உயிரிழந்துள்ளனர்.
தொடர் துப்பாக்கி சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வானவேடிக்கை என முதலில் கருதியுள்ளனர். பின்னரே அது துப்பாக்கி சத்தம் எனவும், சம்பவம் நடந்த குடியிருப்பு நோக்கி விரைந்தும் உள்ளனர்.
இதனிடையே தகவலறிந்து வந்த பொலிசார் காயமடைந்து உயிருக்கு போராடிய 15 நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டம்: மகன் உள்ளிட்ட 12 பேரை சுட்டுத்தள்ளிய தந்தை
Reviewed by Unknown
on
6:33:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:33:00 PM
Rating:



கருத்துகள் இல்லை: