ஸ்மார்ட்போன் கதிர்வீச்சிலிருந்து எவ்வாறு தப்பிக்கலாம்.? யோசிக்காம இதை படீங்க!
பணப்பரிவர்த்தனை, ப்ரியமானவர்களுடன் சாட்டிங், தொலைபேசி உரையாடல், வீடியோ சாட்டிங், கேம்ஸ், கூகுள் தேடல், உடல்நிலை பேண ஹெல்த் ஆப்ஸ்... என எத்தனையோ வேலைகளுக்கு உதவுகிற கையடக்க ஸ்மார்ட்போன் நம் எல்லோரையும் கட்டிப்போட்டிருக்கிறது. `அவன் செல்போன் இல்லைனா செத்துப்போயிடுவான்...’ என ஒரு திரைப்படத்தில் விளையாட்டாகச் சொல்வார்கள். அது உண்மையோ, பொய்யோ ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த ஓர் அங்கமாகிவிட்டது என்பது மறுக்க முடியாதது. பல சிம்கார்டு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட டாக்டைம் ஆஃபர்கள் வழங்குகின்றன. அதனாலேயே பலர், வேலை காரணங்களுக்காகவும், தங்கள் நண்பர்கள், உறவினர்களோடு பேசுவதற்காகவும் பல மணி நேரத்தை ஸ்மார்ட்போனிலேயே செலவழிக்கின்றனர். `சார்ஜ் எடு... கொண்டாடு!’ என்பதுபோல, தீரத் தீர சார்ஜ் ஏற்றி, பேசிப் பேசி மாய்ந்துபோகிறார்கள் நம் மக்கள். இதில் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உண்டு. ஸ்மார்ட்போனில் பல மணி நேரம் பேசும்போது, அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு, (Radio Frequency Radiation - RF) கேட்கும்திறனை பாதிக்கிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்க முடியாதுதான். ஆனால் சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கதிர்வீச்சின் தாக்கத்தைக் குறைக்கலாம். அவை என்னென்ன... பார்ப்போம்!
கர்ப்பிணிகள் அதிகநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். அது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும். பிற்காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு நடத்தைக் குறைபாடுகள் (Behaioral Difficulties) ஏற்பட வாய்ப்பு உண்டு.
வேலை காரணமாக, நீண்ட நேரம் ஸ்மார்ட்போனில் பேசவேண்டியிருப்பவர்கள், புளூடூத் ஹெட்செட் அல்லது தரமான இயர்போன்களைப் பயன்படுத்தலாம். அதுவும், 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டிக்கொண்டே பலமணிநேரம் இயர்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். இதனால் கவனச்சிதறல் ஏற்படும். அதன் காரணமாக, விபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
யாரும் அருகில் இல்லாத நேரங்களில் ஸ்பீக்கர் மோடில் பேசலாம். இதனால், ஸ்மார்ட்போனில் இருந்து வெளியாகும் நேரடி கதிர்வீச்சு பாதிப்பைக் குறைக்கலாம்.
சட்டை பாக்கெட், பான்ட் பாக்கெட் ஆகியவற்றில் ஸ்மார்ட்போன் வைத்துக்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். இதனால் இதயத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோல, இறுக்கமான ஆடையை அணிந்துகொண்டு தரமற்ற ஸ்மார்ட்போனை பான்ட் பாக்கெட்டில் வைக்கும் பழக்கம் இருந்தால், அவர்களுக்கு விந்தணுக்கள் பாதிப்பு ஏற்படலாம்.
தோலில் கதிர்வீச்சு ஊடுருவுவதைத் தவிர்க்கும் 'ரேடியேஷன் டிஃபெண்டர் கேஸ்கள்' மார்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்..
பேட்டரியை அதிகச் சூடாக்கும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
இருட்டில் ஸ்மார்ட்போனின் திரையைப் பலமணிநேரம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு, பார்வைக்குறைபாடுகளும் ஏற்படலாம்.
இரவு தூங்கும்போது, தலையணையின் அடியில் ஸ்மார்ட்போன் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைத்திருந்தால், இரவு முழுவதும் அதன் கதிர்வீச்சு, மூளையைத் தாக்கும் அபாயம் உள்ளது.
ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது ஒன்றே, அதன் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஒரே வழி!
ஸ்மார்ட்போன் கதிர்வீச்சிலிருந்து எவ்வாறு தப்பிக்கலாம்.? யோசிக்காம இதை படீங்க!
Reviewed by Unknown
on
6:22:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:22:00 PM
Rating:


கருத்துகள் இல்லை: