புதுவருடத்தில் மாணவர்களுக்கு இனிப்பான தகவல்!
புத்தாண்டில் மாணவர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் நலத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் 45 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபா பெறுமதியான சுகாதார காப்பீடு வழங்கப்படவுள்ளது.
5 முதல் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கே இந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் விடுத்துள்ள விசேட அறிக்கை மூலமாகவே இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த நடவடிக்கைக்காக 2700 மில்லியன் ரூபா இம்முறை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் ஊடாக அனைத்து மாணவர்களும் எந்தவொரு வைத்தியசாலையிலும் சுகாதார வசதி பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசாங்கம் மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களுக்கும் இந்த காப்பீடு வழங்கப்படவுள்ளது.

Reviewed by Unknown
on
12:47:00 AM
Rating:
Reviewed by Unknown
on
12:47:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: