Top Ad unit 728 × 90

புதுவருடம் கொண்டாடிய சிறுவன் மரணம்! எப்படி தெரியுமா..?

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய்க் கிராமத்தில் புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறுவன் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர், புன்னைக்குடா வீதி, தளவாய் கிராமத்தைச் சேர்ந்த தயாகரன் மதுஷான் (வயது11) என்ற சிறுவனே இன்று (01.01.2017) அதிகாலை மர்மமான முறையில் மரணித்துள்ளான்.

இதுபற்றி சிறுவனின் தந்தை சிவலிங்கம் தயாகரன் தெரிவிக்கையில்-
தான் புன்னைக்குடாவில் ஆழ் கடல் தொழிலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் மனைவியிடமிருந்து மகன் மரணித்து விட்டதாக செய்தி கிடைத்தது.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு மகன் கொண்டு செல்லப்பட்டபோதும் அவரது உயிர் முன்னரே பிரிந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டின்போது எமது வீட்டு வளவில் அமைக்கப்பட்டுள்ள புதிய தேவாலயத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் அவர் சனிக்கிழமை இரவிலிருந்து ஞாயிறு அதிகாலை வரை ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே இவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக மனைவியிடமிருந்து அறியக்கிடைத்தது என்றார்.

இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுவருடம் கொண்டாடிய சிறுவன் மரணம்! எப்படி தெரியுமா..? Reviewed by Unknown on 12:57:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.