Top Ad unit 728 × 90

உலக சாதனைகளுக்கு மத்தியில் புதிய கின்னஸ் சாதனை

நாள்தோறும் புதுப்பிக்கப்படும் உலக சாதனைகளுக்கு மத்தியில் புதிய கின்னஸ் உலக சாதனை தொடர்பான செய்தி வெளிவந்துள்ளது.

இந்த உலக சாதனையானது ஒருவர் தலை மீது இன்னொருவர் தலை வைத்து படிக்கட்டுகளை ஏறுவது ஆகும்.

இந்த உலக சாதனையை வியட்நாமை சேர்ந்த இரு சகோதரர்கள் படைத்துள்ளனர்.

இவர்களது பெயர் Giang Quoc Nghiep மற்றும் Giang Quoc Co என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள புனித மேரி கத்தோலிக்க ஆலயத்திற்கு முன்னாள் உள்ள படிக்கட்டுகளில் இவ்வாறு ஒருவரது தலை மீது இன்னொருவர் தலைவைத்து 90 படிக்கட்டுக்கள் ஏறி இந்த உலக சாதனையை அவர்கள் படைத்துள்ளனர்.

எனினும் இதற்காக அவர்களுக்கு 52 விநாடிகளே செலவழிந்ததாக அந்த செய்திகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உலக சாதனையை படைப்பதற்காக அந்த இரண்டு சகோதரர்களும் 15 ஆண்டுகள் பயிற்சி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


உலக சாதனைகளுக்கு மத்தியில் புதிய கின்னஸ் சாதனை Reviewed by Unknown on 5:54:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.