கண்ணைக்கட்டி நபரின் தலையை சுத்தியலால் அடித்த தற்காப்பு கலை வீரர்.. ஏன் தெரியுமா?(video)
இந்தியாவில் சீக்கியர்கள் திருவிழாவின் போது தற்காப்பு கலை வீரர் ஒருவர், தரையில் படுத்திருந்த ஒருவர் தலையில் தவறுதலாக சுத்தியலை வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சீக்கியர்களின் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அது போன்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களின் திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் பொழுதுபோக்கிற்காக ஏராளமான வித்தைகள் காட்டப்படுவது வழக்கம்.
அதுபோன்று தற்காப்பு கலை வீரர் ஒருவர், தரையில் இரண்டு நபர்களை படுக்க வைத்து அவர்கள் தலை, கை மற்றும் கால்களுக்கு இடையில் தண்ணீர் பழம் மற்றும் காலியான டின்களை வைத்துள்ளார்.
அதன் பின்னர் அவர் தன் கண்களை கட்டிக் கொண்டு, முதல் நபரின் அருகே இருந்த தண்ணீர் பழம் மற்றும் காலியான டின்களை வெற்றிகரமாக சுத்தியலால் உடைத்து எறிந்தார்.
அதைத் தொடர்ந்து இரண்டாவது நபரின் அருகில் சென்று இதே போன்று செய்ய முற்பட்ட போது, எதிர்பாரத விதமாக அந்நபரின் தலையில் சுத்தியலை அடித்துவிட்டார்.
இதனால் அந்த நபர் அந்த இடத்திலே வலியால் துடி துடித்து சுருண்டு விழுந்தார்.
இதைக் கண்டு அங்கு கூடியிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் பிரச்சனை எதுவும் இல்லை என்றும், விரைவில் சரியாகி விடும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் அந்த தற்காப்பு கலை வீரர் அந்த நபரை சுத்தியலைக் கொண்டு அடித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ

Reviewed by Unknown
on
7:19:00 PM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi_Nt5o7Kl6y8glQaIffhZUvzf8cqfRCy2se9IJPAi0QaeBUcC18gKjDHgm3EMAGbJfE63cjeCnQkDzsBcpOgQ94BwAClzqj609cM07NzKTDusPOcmDEfsfgbcMIWcAI-Dr_ki_ZXOSkgt/s72-c/su.jpg)
கருத்துகள் இல்லை: