Top Ad unit 728 × 90

ஆண் குழந்தை பிறக்க சித்தர்கள் கூறும் ரகசியம்

ஆசைக்கொன்று, ஆஸ்திக்கொன்று என்று சொல்வதுண்டு. ஆனால் இப்போது ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது. சிலர் நிறைய பெண் குழந்தைகள் இருக்கின்றன.
ஒரு ஆண் குழந்தையாவது வேண்டுமென ஏங்குவதுண்டு. அதற்காக வீட்டில் உள்ள பெண்ணைக் கடிந்துகொள்வதுண்டு. ஆனால் அது ஆண், பெண் இருவரும் உறவு கொள்ளும் போது, சில அடிப்படையான விஷயங்களைத் தரிந்து கொண்டு செயல்பட்டாலே தங்களுக்கு என்ன குழந்தை வேண்டுமோ அதைப் பெற முடியும். இதற்கு நம்முடைய முன்னோர்களும் சித்தர்களுமே சில வழிமுறைகளைக் கூறியிருக்கிறார்கள்.
இரவில் அரை வயிறளவு மட்டும் தான் சாப்பிட வேண்டும். சிறிது பால், 2 பழம் சாப்பிட வேண்டும். இடது கை பக்கமாகத் திரும்பிப் படுக்க வேண்டும். இரவு முழுக்க அப்படித் தான் படுத்திருக்க வேண்டும்.  அப்போது வலது புறத்தில் சூரியக்கலை இயங்கிக் கொண்டிருக்கும். விடியற்காலை 4 மணிக்கு எழுந்து, 5 நிமிடம் தியானம் செய்துவிட்டு, பெண்ணுடன் உறவு கொண்டால், நிச்சயம் ஆண் குழந்தை தான் பிறக்கும் என்கின்றனர் சித்தர்கள்.

ஆனால் சிலர் இடதுபக்கம் படுத்து எழுந்து சூரியக் கலையில் உடலுறவு கொண்டாலும் கூட, பெண் குழந்தை பிறந்ததென வருத்தப்படுவதுண்டு. அதற்குக் காரணம் இரவில் வயிறு நிரம்ப சாப்பிடக் கூடாது என்பதை முக்கியமாக மனதுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அரைவயிறு சாப்பிட்டுத் தூங்கும் போது, அதிகாலையில் பசி அதிகரிக்கும். சூரியக்கலையில்  வயிறு பசியாக இருக்கும் போது, உடலுறவு கொள்ள வேண்டும் என்கின்றனர் சித்தர்கள். அப்படி செய்தால் நிச்சயம் ஆண் குழந்தை பிறக்குமாம்.

ஆண் குழந்தைகள் வேண்டும் என்று ஏங்குபவர்கள் தங்களுடைய விந்துக்களைக் கட்டும் வித்தையைப் பயில வேண்டும். அதாவது, ஒரு மாத காலத்துக்கு விந்துவை வெளியேற்றாமல் தேக்கி வைத்து உறவு கொள்ள வேண்டும்.

ஆண் குழந்தை வேண்டுமென்றால் பெண் மாதவிலக்கான நாளிலிருந்து முறையே, 6,8,10,12, 14, 16, 18 ஆவது நாட்களில் உடலுறவு வைத்துக் கொண்டால், நிச்சயம் ஆண் குழந்தை பிறக்குமெனக் கூறப்படுகிறது.

அதே பெண் குழந்தை வேண்டுவோர் பெண்களின் மாதவிலக்கு நாளிலிருந்து முறையே 7, 9,11,13,15,17, 19 ஆம் நாட்களில் உடலுறுவு கொண்டால், நிச்சயம் பெண் குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது.
ஆண் குழந்தை பிறக்க சித்தர்கள் கூறும் ரகசியம் Reviewed by Unknown on 3:31:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.