Top Ad unit 728 × 90

டோனியை துடைத்தெறிந்த சங்ககாரா.. மின்னல் வேக ஸ்டம்பிங்: அசத்தல் வீடியோ!(video)

இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வந்தவர் சங்ககாரா. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

இலங்கை அணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவு மற்றும் ஏனையநாடுகளில் நடக்கும் உள்ளூர் டி 20 போட்டிகளில் பங்குபெற்று அசத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு இலங்கை அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது.

இதில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலியா வீரரான ஜிம்மி மகருக்கு பந்து வீசினார். இதை எதிர்கொண்ட ஜிம்மி அதை கிரீசிற்கு வெளியே வந்து அடித்து ஆட முற்பட்டார்.

ஆனால் பந்து அவரை ஏமாற்றி கீப்பரான சங்ககராவிடம் மின்னல் வேகத்தில் சென்றது. பந்தை பிடித்ததும் சற்று தூரம் சென்ற சங்ககாரா அங்கிருந்தே மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங்க் செய்தார்.

இதைக் கண்ட இலங்கை வீரர்கள் அனைவரும் சங்ககாராவை புகழ்ந்து தள்ளினர். டோனி சர்வதேச கிரிக்கெட்டிற்குள் காலடி எடுத்து வைத்தது 2004 ஆம் ஆண்டு, அதன் பின்னர் அவர் மின்னல் வேக ஸ்டம்பிங் பல செய்துள்ளார்.

ஆனால் சங்ககாராவோ 2003 ஆம் ஆண்டே தன்னுடைய மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


டோனியை துடைத்தெறிந்த சங்ககாரா.. மின்னல் வேக ஸ்டம்பிங்: அசத்தல் வீடியோ!(video) Reviewed by Unknown on 7:00:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.