Top Ad unit 728 × 90

மூதாட்டியிடம் 2 கோடி ரூபாய் பறிக்க முயன்ற பொலிஸ் வேடத்தில் வந்த மர்ம நபர்

சுவிட்சர்லாந்து நாட்டில் பொலிஸ் அதிகாரி எனக்கூறி மூதாட்டி ஒருவரிடம் ரூ 2 கோடி பறிக்க முயன்ற மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுவிஸின் Zug நகரில் 88 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மூதாட்டிக்கு மர்ம அழைப்பு ஒன்று அடிக்கடி வந்துள்ளது.

அதில் பேசிய நபர் ஒருவர், ‘நான் பொலிஸ் அதிகாரி பேசுகிறேன். சந்தேகத்திற்குரிய வகையில் உங்களுக்கு பழக்கமானவர்கள் கைதாகியுள்ளனர்.

கைதான இருவரும் உங்களுடைய முகவரியை கொடுத்துள்ளனர். நீங்கள் குற்றமற்றவர் என்றால், உடனடியாக வங்கிக்கு சென்று 1,30,000 பிராங்க்(1,93,14,270 இலங்கை ரூபாய்) பணத்தை எடுத்து வந்து ஒப்படையுங்கள்’ என அந்த மர்ம நபர் பேசியுள்ளார்.

நபரின் பேச்சால் சந்தேகம் ஏற்பட்ட மூதாட்டி உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

அதில், ‘தனிமையில் உள்ள முதியவர்களை குறிவைத்து ஒரு மர்ம கும்பல் பணம் பறிக்க முயன்று வருகிறது.

எந்த சூழ்நிலையிலும் பொதுமக்களிடம் பொலிசார் பணம் கேட்டு தொலைப்பேசியில் பேச மாட்டார்கள். எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும், இதுபோன்ற அழைப்புகள் கிடைக்கப்பெற்றால் உடனடியாக பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாரு பொதுமக்களுக்கு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மூதாட்டியிடம் 2 கோடி ரூபாய் பறிக்க முயன்ற பொலிஸ் வேடத்தில் வந்த மர்ம நபர் Reviewed by Unknown on 6:02:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.