Top Ad unit 728 × 90

கடினமான வொர்க் அவுட்ஸ் செய்வேன்! ராதிகா ஆப்தே


கபாலியில் நடித்து தமிழ் கற்றுக் கொண்டீர்களா என்று கேட்டால் பரவால்ல, தண்ணி, அண்ணா என்று சில வார்த்தைகளைக் கொஞ்சிப் பேசுகிறார். எப்பவும் துள்ளலா இருக்கீங்க சூப்பர் ஸ்லிம்மா ரொம்ப அழகா இருக்கீங்க எல்லாவற்றையும் விட முக்கியமாக முகம் கொள்ளாத சிரிப்போட இருக்கீங்க இதெல்லாம் எப்படி சாத்தியம்,  என்று நடிகை ராதிகா அப்தேவிடம் கேட்ட போது சிரித்தபடி பதில் அளித்தார்.

தினமும் எதாவது சாப்பிடறீங்களா? இவ்ளோ ஒல்லியா இருக்கீங்க?

காலை உணவா கஞ்சியும் பிரவுன் ப்ரெட் டோஸ்ட்டும் சாப்பிடுவேன். கொஞ்ச நேரம் கழிச்சு எதாவது ப்ரூட் ஜூஸ் அல்லது பால். அவ்ளோ தான். ஷூட்டிங் இருந்தா கிளம்பிடுவேன். மதியம் எங்க இருந்தாலும் என்னோட லன்ச் மெனு காய்கறி சாலட் மற்றும் மூணு சப்பாத்தி. இரவு உணவைப் பொருத்தவரையில் எப்பவுமே மீன் அல்லது சிக்கன் சாப்பிடுவேன். தூங்கப் போகறதுக்கு முன்னாடி க்ரீன் டீ கட்டாயம் உண்டு.

ஒரே வெயிட்ல என்ன பயிற்சி செய்யறீங்க? உங்க உருவத்தைப் பார்த்து வயசை கண்டுபிடிக்க முடியலையே?

முப்பத்தி ஒண்ணு வயசாச்சு எனக்கு. வயசு எல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும். எப்பவும் ஹெல்தியா ஹாப்பியா இருக்கணும். அதான் என்னோட மந்த்ரா. தினமும் ஜாகிங் அல்லது ரன்னிங் போவேன். எனக்குப் பிடிச்ச வொர்க் அவுட்ஸை செய்வேன்.  எதைச் செஞ்சாலும் ஆத்மார்த்தமா, ரசிச்சு செய்வேன். அது வொர்க் அவுட்டா இருந்தாலும் சரி, என்னோட வேலையா இருந்தாலும் சரி...  நம்ம உடம்பு மீது நாம் காட்டும் அக்கறைதான் எப்பவும் நம்மை 'சூப்பர் ஃபிட்... சூப்பர் ஸ்மார்ட்டா’ மாத்தும்.'

முன்னால வாரத்துல இரண்டு நாள் தான் ஜிம் போவேன் ஆனால் இப்ப நாலு நாள் ஜிம் போறேன் தவிர தினமும் வீட்ல ஒரு மணி நேரம் எக்ஸர்சைஸ் பண்ணுவேன். தினமும் ரெண்டு மணி நேரம் வொர்க் அவுட் பண்ணுவேன். அதுவும் சாதாரண வொர்க் அவுட்ஸ் கிடையாது, கொஞ்சம் அட்வான்ஸ்ட் லெவல். உடம்பு லேசா எடையே இல்லாம இருக்கற மாதிரி இருக்கும். தொடர்ந்து உடற்பயிற்சிச் செய்யணும்னா அதுக்கு விடாமுயற்சி தேவை. முதல்ல,தொடர்ந்து இரண்டு நாள் உடற்பயிற்சி செய்யும்போது உடம்பு ரொம்ப வலிக்கும். ஆனா, மூணாவது நாள் செய்யும்போது உடம்பு அதைதாங்கிக்க ஆரம்பிக்கும். உடல்ல இருக்குற தசைகள் எல்லாம் 'டோன்’ ஆகும்.

ரன்னிங் மற்றும் சைக்ளிங் எனக்கு மிகவும் பிடித்த பயிற்சி. ஜிம் போக மூட் இல்லாத போது வீட்ல லைட் வெயிட் ட்ரெயினிங் பயிற்சிகள் செய்வேன்.  எல்லாப் பெண்களும் நிச்சயம் வெயிட் டிரெயினிங் பயிற்சி எடுத்துக்கணும். வயசு ஏறும்போது நம்மோட எலும்பின் அடர்த்தி குறையும். வயசான பெண்களைப் பார்த்தீங்கன்னா பேலன்ஸ் இல்லாம நிக்கவோ, நடக்கவோ ரொம்பக் கஷ்டப்படுவாங்க. வாக்கிங் போறப்ப, பாத்ரூம்ல அடிக்கடி வழுக்கி விழுந்திடுவாங்க. ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை நிறைய பெண்களுக்கு இருக்கு. இதெல்லாம் தவிர்க்க 30 வயதை நெருங்கும்போதே பேலன்ஸ் பயிற்சி,  உடலை உறுதிப்படுத்தும் பயிற்சிகளைக் கட்டாயம் செய்ய ஆரம்பிச்சிடணும். இப்படி எல்லாம் அட்வைஸ் செய்து எனக்குப் பழக்கமில்லை. ஆனாலும் நல்ல விஷயங்களை ஷேர் செய்வதில் தப்பில்லையே. வொர்க் அவுட்ஸ் தவிர நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீச்சல் அடிக்க ரொம்பப் பிடிக்கும். உடம்பும் மனசும் உடனடியா ரிலாக்ஸ் ஆக ஒரே வழி நீச்சல் தான்.

உடம்பு மட்டுமில்லாம மனசையும் அழகா வைச்சுக்கணும். அதுக்கு முக்கியமா இதுக்கு மேலே இதுக்கு மேலேன்னு பறந்துட்டு இருக்கக் கூடாது. தேவைகளுக்கு எல்லையே இல்லை. இவ்ளோ தான்னு நமக்குள்ள ஒரு லிமிட் வைச்சிக்கிட்டு அன்லிமிடட்டா சந்தோஷங்களை எடுத்துக்கணும். என்னோட சந்தோஷம் என்னன்ன என் குடும்பம், நண்பர்கள், வேலை, தியேட்டர் மற்றும் சினிமா. எனக்குப் பிடிச்ச விஷயங்களை உடனே செஞ்சுடுவேன். அது பயணமா இருக்கலாம் இல்லை ஒரு சின்ன ஓய்வா கூட இருக்கலாம்.
கடினமான வொர்க் அவுட்ஸ் செய்வேன்! ராதிகா ஆப்தே Reviewed by Unknown on 6:56:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.