நெற்பயிரைத் தாக்கும் இலைக்கருகல் நோய்: கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை
நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்குதல் இளம் பயிர் முதல் அதிக அளவில் காணப்படுகிறது.
தாக்குதலின்
அறிகுறிகள்: இலைப் பரப்பின் மீது நீரில் நனைத்தது போன்று மஞ்சள் நிற
வரிகளுடன் காணப்படும் அல்லது இலை நுனிகள் அலை வடிவ ஓரத்துடன் மாறும்.
நுனியிலிருந்து இலைகள் காய்ந்தும் பின் சுருண்டும், இலை நடுநரம்பு பழுதடையாமலும் காணப்படும்.
அதிகாலை நேரங்களில் இளம் புள்ளிகளின் மேல் பால் போன்ற அல்லது பனித்துளி போல் திரவம் வடிதல் காணப்படும்.
தீவிர தாக்குதல் ஏற்பட்ட இலைகள் விரைவில் காய்ந்துவிடும். 60 வரை தானிய மகசூல் இழப்பு ஏற்படும்.
பற்றாக்குறை அறிகுறிகள்: மேல் பகுதி இலைகளில் புழுதி போன்ற பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும்.
வளர்ச்சி குன்றிய பயிர் செடிகள். தூர்கள் வைப்பது குறைந்து பூங்கிளை மலட்டுத் தன்மையும் காணப்படும்.
இளம் இலைகளின் இலையடிப்பாகம் பசுமை சோகை ஏற்பட்டு பழுப்பு நிறமாக மாறுதல். முதிர் இலைகளில் பொட்டுகொப்புளம் போன்ற புள்ளிகள் அல்லது கீறுகளுடன் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை: ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் டெட்ராசைக்லின் கலவை 300 கிராம் காப்பர் ஆக்சிக்லோரைடு (அ) காப்பர் ஹைட்ரோக்லோரைடு 1.25 கிலோ எக்டர் ஆகியவற்றை கலந்து தெளிக்க வேண்டும்.
பின் தேவை ஏற்பட்டால், 15 நாள்களுக்குப் பின் ஒருமுறை இக்கலவையைத் தெளிக்கலாம். பிளீச்சிங் பவுடர் 5 கிலோ எக்டர் என்ற அளவில் பாசன நீருடன் கலந்து அளிக்கலாம்.
மேலும், துத்தநாக சத்து பற்றாக்குறை அறிகுறியும் நெற்பயிரில் துத்தநாக துகள்களை (எ.கா துத்தநாகம்-இடீடிஏ-உஈபஅ) 500 கிராம் இலைவழி அளிப்பாக பயன்படுத்தவேண்டும்.
நெற்பயிரைத் தாக்கும் இலைக்கருகல் நோய்: கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை
Reviewed by Unknown
on
7:39:00 AM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipXcJL2k8AfQk7EokhIun1WynFYab1PLobPdDNMO-JLU3RnydhstEKDBB4MVlu_m53h7afbbB5bjZC87w5TTJeSD-3npprsic7V66qiYiWx9aVPgp9sKag-d6p5eTAg8kT2ATe5ZL06UMD/s72-c/sym.jpg)
கருத்துகள் இல்லை: