Top Ad unit 728 × 90

கற்பழிப்பு குற்றங்களுக்கு இனி தண்டனை கிடையாது புதிய சட்டம்:காலக் கொடுமைட!

துருக்கி நாட்டில் இளம்பெண்களை கற்பழிக்கும் ஆண்கள் பாதிக்கப்பட்டவர்களையே திருமணம் செய்துக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை கிடையாது என்ற புதிய சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

துருக்கி நாட்டின் ஜனாதிபதியான Recep Tayyip Erdogan என்பவரின் கட்சி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்தது.

அதில், ‘18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளை ஆண்கள் கற்பழித்து விட்டு பிறகு அவர்களையே கற்பழித்தவர்கள் திருமணம் செய்துக்கொண்டால் அதற்கு தண்டனை கிடையாது’ என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இதில் ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சிறுமியை மிரட்டி அல்லது பலவந்தமாக கற்பழித்தால் மட்டும் அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி கொண்டு வந்த மசோதாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

எனினும், அரசின் இந்த புதிய சட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

துருக்கி நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற சட்டங்கள் குற்றங்களை மேலும் அதிகரிக்கும்.

ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட பிறகு அவர் மிரட்டப்பட்டாரா? பலவந்தப்படுத்தப்பட்டாரா? என்பதை நிரூபிப்பது கடினம்.

ஒரு பெண்ணை அடைய விரும்பும் ஒரு ஆண்மகன் அவரை கற்பழித்து விட்டால் போதும் அவள் தனக்கு கிடைத்துவிடுவார் என்ற தவறான எண்ணம் ஆண்கள் மத்தியில் அதிகரித்துவிடும்.

மேலும், 18 வயதுள்ள சிறுமிக்கு இந்த புதிய சட்டம் பொருந்தும் என்பதால், இதன் மூலம் குழந்தை திருமணத்தை அரசாங்கமே ஆதாரிப்பது போன்ற ஒரு நிலை ஏற்பட்டு விடும்’ என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா மீது பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு அமுல்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கற்பழிப்பு குற்றங்களுக்கு இனி தண்டனை கிடையாது புதிய சட்டம்:காலக் கொடுமைட! Reviewed by Unknown on 6:27:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.