புலிகளை அழித்தொழிக்க உதவிய நாட்டை ஏன் பகைகிறீர்கள் ..? உதய கம்மன்பில கேள்வி..
விடுதலைப்புலிகள் மீதான யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்த பாக்கிஸ்தானை ஏன் பகைத்துக் கொண்டீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பினார்.
இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற யுத்தத்தின் போது இராணுவத்தினருக்கு ஏற்பட்ட இக்கட்டான சந்தர்ப்பத்தில் பாக்கிஸ்தானே உதவி செய்தது.
இராணுவத்திற்கு யுக்திகளையும் கற்று கொடுத்து மிகப்பெரிய உதவிகளை செய்த நாடு பாக்கிஸ்தான். அதே போன்று பல்வேறு வகையிலும் இலங்கை நெருக்கடிகளை சந்தித்தபோது முன்னிலையில் நின்று உதவி செய்ததும் பாக்கிஸ்தானே.
இப்போது இந்தியாவுடன் சேர்ந்து பாக்கிஸ்தான் நாட்டுடன் கொண்டிருந்த நட்புறவினை முறித்துக்கொண்டீர்கள்.
அதேபோன்று இலங்கை சர்வதேசத்தில் அனைத்து நாடுகளுடனும் நட்புறவு பெற்றுக்கொண்டு விட்டது, அனைத்து நாடுகளும் உதவி செய்ய தயார் நிலையில் இருக்கின்றது என்று கூறுகின்றீர்கள்.
ஆனால் இவ்வாறான நட்புகளால் இலங்கைக்கு என்ன நன்மை விளைந்தது என்பது மட்டும் கூறப்படவில்லை. ஆனால் மஹிந்த ஆட்சியின் போது சர்வதேச நாடுகள் பகைத்துக் கொண்டது என்று கூறினாலும் அப்போது இலங்கைக்கு சர்வதேச நாடுகள் உதவிகளை செய்தே வந்தது.
அத்தகைய ஓர் நிலை இப்போது இலங்கையில் இல்லை. மஹிந்த உலகத்தை பகைத்து கொண்ட போது பெறப்பட்ட உதவிகளும் உலகத்தோடு நட்பு கொண்டபோது கிடைக்கப்பெறவில்லை.
மேலும் அமெரிக்காவுடன் புதிதாக கை கோர்த்து கொண்டுள்ளீர்கள் ஆனால் சீனா மட்டும் இல்லாவிட்டால் அமெரிக்காவே இல்லை.
சீனாவை தங்கியே அமெரிக்கா இருக்கின்றது என்பதனை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும் தாண்டி எமது வெளிவிவகார அமைச்சருக்கு நல்ல புத்தியும், எதிர்காலமும் அமைய வேண்டும் எனவும் நான் பிராத்தனை செய்து கொள்கின்றேன் எனவும் கம்மன்பில தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Unknown
on
6:03:00 PM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPOSVWccCnDa7cJtucWQqRBsnoAaJqvgEbETVTlw8SfKwVThVeQyEtpL8KX5e3lWFUEp3meBCRLqaYb8wl7f5hoXtsv8TkpeB56DxvOwqI9-NS7dpL57dcTzWo8RLXPfEjfR4Xjokq09gv/s72-c/ice_screenshot_20161201-073130.png)
கருத்துகள் இல்லை: