Top Ad unit 728 × 90

கஞ்சாவை வைத்து விட்டு எனது கணவரை கைது செய்ய முற்படுகிறார்கள்.!பாதுகாப்பை கேட்கும் யாழ் யுவதி

புலனாய்வுத் துறையினர் எமது வீட்டில் கஞ்சாவை வைத்து விட்டு எனது கணவரை கைது செய்ய முற்படுகிறார்கள். எனது குடும்பத்துக்கு பாதுகாப்புத் தேவை என குடும்பப் பெண் ஒருவர் உண்மையைக் கூறும் குழுமம் முன்னிலையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வட மாகாண உண்மையைக் கூறும் குழுமத்தின் அமர்வு நேற்றைய தினம் யாழ்.சரஸ்வதி மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சாட்சியம் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து சாட்சியம் அளிக்கையில்,

நான் அல்லாரை வடக்கு, கொடிகாமம் பகுதியில் வசித்து வருகிறேன். தனது கணவன் தமிழீழ காவல் துறையில் கடமையாற்றி இருந்தார்.

கடந்த 2009ம் ஆண்டு எனது கணவர் சந்தேகத்தின் பேரில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பின்னர் தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு தற்போது என்னுடன் உள்ளர்.

அவர் கடும் சித்திரவதைகளுக்குள்ளான காரணமாக அவர் உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். செல்ல முடியாத நிலையிலும் சில வேளைகளில் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

அண்மையில் எமது வீட்டுக்கு பொலிஸ் புலனாய்வு துறையினர் என தெரிவித்து வந்த சிலர் கஞ்சாவை கொண்டு வந்து எமது வீட்டில் வைத்து விட்டு எனது கணவரை கைது செய்ய முற்பட்டார்கள்.

கஞ்சா என்றாலே எவ்வாறு இருக்கும் என்று அன்றுதான் எமக்கு தெரியும். நாம் அனைவரும் கூக்குரல் இட்டு மிகவும் போராடியதில் எனது கணவரை விட்டுச்சென்றார்கள் .

இந்த விடயத்தை வெளியில் சொல்லக்கூடாது என சொன்னார்கள். அதனால் நான் இது தொடர்பாக யாரிடமும் முறைப்பாடு செய்யவில்லை.

பயத்தின் காரணமாகவே இத்தனை நாளாக வெளியில் சொல்லாமல் இருந்தோம். இவ்வாறான அச்சுறுத்தல் காரணமாக எனது கணவர் பயத்தில் வேலைகளுக்கு வெளியில் போவதில்லை.

எமக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத காரணத்தினால் நான் கூலிவேலைக்கு சென்று வருகிறேன்.

பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பமான நிலையில் இருந்து மீண்டு வந்த போதிலும் மீண்டும் மீண்டும் எம்மை இராணுவத்தினர் துன்புறுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

எமக்கு உதவி செய்வதாக கூறி எனது கணவர் இருப்பதை உறுதி செய்வதற்காகவே அடிக்கடி தொலைபேசியில் விரட்டுகிறார்கள்.

அண்மையில் நடைபெற்ற மாவீரர் தினத்தில் அன்றும் எமக்கு அவர்களிடம் இருந்து எனது கணவனை தேடி தொலைபேசி அழைப்பு வந்திருந்தது.

எமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனது கணவருக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு வேவைப்படுவதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் எமக்கான வாழ்வாதார உதவிகளையும் பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
கஞ்சாவை வைத்து விட்டு எனது கணவரை கைது செய்ய முற்படுகிறார்கள்.!பாதுகாப்பை கேட்கும் யாழ் யுவதி Reviewed by Unknown on 6:13:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.