காஸ்ரோவின் நினைவ கூறுவது தவறான காரியம் அல்ல:பிரதமர் ஜெஸ்டின்-கனடா
மறைந்த கியூபாவின் புரட்சியாளரும், நீண்ட காலம் பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதியுமான ஃபிடெல் காஸ்ரோவின், சாதனைகளை எடுத்துக் கூறுவது ஒன்றும் தவறான காரியம் அல்ல என பிரதமர் ஜெஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
மடகஸ்காரில் இடம்பெறும் அனைத்துலக மாநாடு ஒன்றில் பங்குபற்றச் சென்றுள்ள பிரதமர் அங்கு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
ஒரு நாட்டின் முன்னாள் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அதிலும் கனடாவுடன் மிகவும் நீண்டகால உறவினைக் கொண்ட ஒரு நாட்டின் தலைவர் மறைந்துள்ள நிலையில், அவரின் மறைவை ஒட்டி விடுக்கப்படும் இரங்கல் செய்தியே அது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஃபிடெல் காஸ்ரோவின் ஆட்சியினால் அல்லது அரசாங்கத்தினால் பாதிப்புக்களை எதிர்நோக்கியோர் வேறு விதமாகவே சிந்திப்பார்கள் என்பதனை தம்மால் புரிந்து கொள்ள முடிவதாகவும் அவர் விபரித்துள்ளார்.
இதேவேளை கியூபாவில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை தாம் ஒருபோதும் புறந்தள்ளி விடவில்லை எனவும், அண்மையில் தாம் மேற்கொண்ட கியூப பயணத்தின் போதும் அதனை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பிரதமர் ரூடோ டுவிட்டரில் பதிவிட்டிருந்த இரங்கல் செய்தியில், பழம்பெரும் புரட்சியாளர் மற்றும் சொற்பொழிவாளர் என ஃபிடெல் காஸ்ரோ குறித்து பதிவிட்டிருந்தார். மேலும், அவர் தன்னுடைய தந்தைக்கு நல்ல நண்பர் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
காஸ்ரோவின் புரட்சி மற்றும் கொள்கைகள் தொர்பில் இரு வேறு கருத்துக்கள் பரவலாக காணப்படுகின்ற நிலையில், ரூடோவின் இரங்கல் செய்திக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Unknown
on
7:31:00 PM
Rating:
Reviewed by Unknown
on
7:31:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: