Top Ad unit 728 × 90

கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவனை மனைவியே கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம்!!!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவனை மனைவியே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை வடபழனி பக்தவச்சலம் நகரில் வசித்து வந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இவரது மனைவி பாரதி. இந்நிலையில், தனது சக ஊழியருடன் கோபாலகிருஷ்ணனின் மனைவி பாரதிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்துள்ளார் கோபாலகிருஷ்ணன். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த பாரதியும் அவரது கள்ளக் காதலன் கார்த்திக் ரவிந்தரனும் கோபாலகிருஷ்ணனைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினர்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு கோபாலகிருஷ்ணன் உறங்கிய உடன் கார்த்திக்கை பாரதி அழைத்துள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி கோபாலகிருஷ்ணனின் கழுத்தை அவர்கள் கத்தியால் அறுத்து கொன்றுள்ளனர்.

பின்னர் அதனை மறைப்பதற்காக கொள்ளை அடித்துவிட்டு கோபாலகிருஷ்ணனை மர்ம நபர்கள் கொன்றுவிட்டு சென்றுவிட்டதாக கூறி நாடகம் ஆடும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக வீட்டில் இருந்த நகைகளை கார்த்தி திருடிச் செல்வது போன்று அவர்கள் நாடகம் ஆடினர். ஆனால் வடபழனியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடம் சிக்கி, விசாரணையின்போது முன்னுக்கு பின்பேசி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார் கார்த்திக்.

அதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற பொலிசார் அங்கு பாரதி மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவனை மனைவியே கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம்!!!! Reviewed by Unknown on 5:00:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.