விஷாலுக்கு சரத் மீது தனிப்பட்ட கோபம்-ராதிகா கொந்தளிப்பு!
விஷால் சரத்குமார் மீது கோபத்தில் இருப்பதற்கு தனிப்பட்ட பிரச்சனை காரணம் என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர். இதை சட்டப்படி சந்திக்கப் போவதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
முதல் சரத் கோடிகளில் ஊழல் செய்ததாக கூறினார்கள், பின்னர் லட்சங்கள் என்றார்கள். தற்போதோ கொஞ்சம் பணம் அதுவும் திருப்பிக் கொடுக்கப்பட்டது என்கிறார்கள். இது சின்னப்புள்ளத்தனமாக உள்ளது.
பிரச்சனை என்று வந்தவர்களுக்கு சரத் எப்படி உதவி செய்தார் என்பது திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். கமலில் இருந்து விஷால் வரை அனைவரின் பிரச்சனைகளையும் தீர்த்தவர் சரத்.
அனைவருக்கும் ஓடியோடி உதவியவருக்கு தற்போது ஒரு நடிகர் கூட ஆதரவாக இல்லை. பொதுக்குழுவில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்படுவதாக தங்களிடம் தெரிவிக்கவில்லை என பலர் எனக்கு போன் செய்து கூறினார்கள்.
மூத்த நடிகர் என்பதை விடுங்கள் ஒரு மனிதர் என்ற அடிப்படையில் கூட சரத்துக்கு மரியாதை அளிக்கவில்லை. விஷாலுக்கு என்ன பிரச்சனை என அனைவருக்கும் தெரியும். தனிப்பட்ட விஷயம் காரணமாக விஷால் சரத் மீது கோபத்தில் உள்ளார்.
விஷாலுக்கு சரத் மீது தனிப்பட்ட கோபம்-ராதிகா கொந்தளிப்பு!
Reviewed by Unknown
on
1:50:00 AM
Rating:
Reviewed by Unknown
on
1:50:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: