Top Ad unit 728 × 90

மார்பு சளியா?,தொப்பை பிரச்சனையால் அவஸ்தையா? இதோ இருக்கே சூப்பரான மருந்து

சித்த ஆயுர்வேத மருந்துகளில் முக்கியமான இடத்தை பிடித்துள்ள மூலிகைச்செடி ஓமம்.
பலவித நோய்களை குணப்படுத்து ஓமத்தை பயன்படுத்துவது எப்படி?

    1/2 ஸ்பூன் ஓமத்தை 1 லிட்டர் நீரில் கொதிக்கவைத்து, அதை தினமும் குடித்தால், ஆஸ்துமா நோயின் தாக்கம் நமக்கு ஏற்படாது. குடலிரைச்சல், இரைப்பு, போன்ற நோய்களுக்குன் ஓமம் தண்ணீர் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

    ஓமம், மிளகு 35 கிராம் எடுத்து நன்கு பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

    ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால், மந்தம் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

    பசியைத் தூண்டுவதுடன், நாம் சாப்பிட்ட உணவு எளிதில் சீரணமாகுதல் மற்றும் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளைக்கும் தீர்வாக, ஓமத்தை கஷாயமாக்கி குடித்து வரலாம்.

    மார்ச்சளி இருந்தால், ஓமத்தின் எண்ணெயை மார்பின் மீது தடவ வேண்டும். மேலும் பல்வலி பிரச்சனைக்கும் இந்த ஓம எண்ணெயைப் பஞ்சில் நனைத்து பல் மீது வைத்து அழுத்திக் கொள்ள வேண்டும்.

    சுறுசுறுப்பின்றி சோம்பலாய் எப்போதும் உணர்பவர்கள், சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

    தொப்பை உள்ளவர்கள் தினமும் இரவில் அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் 2 ஸ்பூன் ஓமம் பொடி ஆகிய இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து, நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்து மறுநாள் காலையில் குடித்து வந்தால் தொப்பை விரைவில் குறையும்.
மார்பு சளியா?,தொப்பை பிரச்சனையால் அவஸ்தையா? இதோ இருக்கே சூப்பரான மருந்து Reviewed by Unknown on 6:19:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.